மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பள விவகாரம் குறித்து கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதற்காக சம்பள நிர்ணய சபை பெப்ரவரி 6 ஆம் திகதி கூடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில ஆவணங்களை தயாரிப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் அவகாசம் கோரியுள்ளதாலேயே, கலந்துரையாடல் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா, தமக்கு தெரியப்படுத்தினார் என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாததால், சம்பளத்தை கையாளும் பொறுப்பு சம்பள நிர்ணய சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரச தரப்பிலிருந்து 19 பேர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.