‘சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

அதிபர், ஆசிரியர்களின் நியாயப்பூர்வமான சம்பள முரண்பாட்டுக்குக்கு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று (22.10.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் பிரமுகர்களுக்கு அரசாங்கம் மீது உண்மையாலுமே விசுவாசம் இருந்தால், அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். அதனைவிடுத்து அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்துவது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே அமையும்.

ஒக்டோபர் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் 98 வீதமான ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை. பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்கூட, சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்குமாறே வலியுறுத்தினர்.

எனவே, அதிபர், ஆசிரியர்களின் நியாயப்பூர்வமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்து என்னவென்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி முடிவை அறிவிக்கும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக்கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் முன்வரவேண்டும். அதேபோல ஆசிரியர் சமூகம்சார் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இப்பிரச்சினை மேலும் இழுபடும் அபாயம் உள்ளது.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles