தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்- நசீர் அஹமட்

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 60 வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய் நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகவே இதனை தாம் பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் நசீர் அஹமட், படுகுழிக்குச் சென்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை  தூக்கி நிமிர்த்த சர்வதேசத்தின் உதவிகளே தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தில் புதிய ஜனாதிபதிக்குள்ள கீர்த்தியாலும் ஜனநாயகத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையாலும் உதவிகளைப் பெற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles