” தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.
இதன்போது சர்வதேச நாணய நிதிய விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நிதி நிலைமை தொடர்பில் நிதி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்திவருகின்றது. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளோம். எனவே, தேவையேற்பட்டால் நிச்சயம் ஒத்தழைப்பு பெறப்படும்.” – என்றார்.
