சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடகிழக்கில் போராட்டம்!

 

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு – கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்படி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட் டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமலஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடக வியலாளர்கள் என அனைவருக்கும் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

“போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப்படுவதற்கு மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு புதுப்புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற் கொள்ளப்பட்டுக் கொண்டே செல்கின்றது.

இற்றை வரை மேற்படி தீர்மானங்கள் ஊடாககுறிப்பாக வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டதமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை.” என மேற்படி அழைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பை வழங்குமாறு அனைவரையும் அன்புடன்
வேண்டுகின்றோம்.” – எனவும் வடக்கு – கிழக்கு சமூக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles