சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லுாரி மாணவி வசந்தகுமார் நிதர்சனா மலையகத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பெருமையை தேடி தந்திருக்கிறார் என கல்வி இராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” தரம்10 இல் கல்வி பயிலும் இச்சிறுமியின் சாதனை என்பது இலகுவான விடயமல்ல. நாவலப்பிட்டியில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 54 கி.மீ. தூரத்தினை குறைந்த மணித்தியாலங்களில் நடந்து முடித்துள்ளார். அந்த சிறுக்கு கல்வி அமைச்சர் என்ற ரீதியில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.
சாதனை படைத்த மாணவியை கல்வி அமைச்சுக்கு அழைத்து, அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்க உள்ளேன்.
இதேவேளை இந்த மாணவியின் சாதைனையை சோழன் உலக சாதனை புத்தகத்துக்கு உள்வாங்கிய சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர்
நீலமேகம் நிமலன் உள்ளிட்ட அங்கத்தவர்களுக்கு நன்றிகள்.” – எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.










