அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்தார் லெபனான் பிரதமர்!

லெபனான் நாட்டில் நிலவி வரும் சிக்கலான உள்நாட்டுச் சூழல் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் தனது அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பழ்லுல்லாஹ் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இத்தகைய பேச்சுவார்த்தைகள் லெபனான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள லெபனானுக்கு உள்நாட்டு ஒற்றுமை அவசியமான இந்த நேரத்தில், இத்தகைய பேச்சுவார்த்தைகள் பிரிவினையை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையிலேயே அமெரிக்க பயணத்தை லெபனான் பிரதமர் ஒத்திவைத்துள்ளார்.

Related Articles

Latest Articles