சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தவறி விழுந்து பலி

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொரட, மாரதென்ன பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மரத்தென்ன வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணை தொடர்கிறது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles