மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, பாக்றோ தோட்டத்திலுள்ள அம்மன் கோவில் உடைக்கப்பட்டு, தங்க சங்கிலி மற்றும் உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.
இன்று (28/3/2022) காலை ஆலயத்தின் பூசகர் வழமைப்போல் ஆலயத்திற்கு சென்ற வேலை, ஆலயத்தின் நுழைவாயில் கதவில் பொறுத்தப்பட்டிருந்தத பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு ஆலய நிர்வாக சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அங்கு வந்த தோட்ட மக்கள், ஆலய நிர்வாக சபையினர் ஆகியோர் – ஆலயத்திற்குள் சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் அணியப்பட்டிருந்த தங்க மாலை மட்டும் ஆலய உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமிமலை ஞானராஜ்










