சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகுவதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.
இவர், சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவி உள்ளிட்ட பிற பொறுப்புக்களிலிருந்தும் விலகுவாரென தெரிவிக்கப்படுகிறது.
