சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.
தேர்தலுக்குரிய வேட்பு மனுக்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.