சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாட பொருட்களின் விலையை குறைக்கவும்!

“ இம்மாதம் பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளது. எனவே இக்காலத்தில் அதிகளவான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் கொள்வனவு செய்வதற்கான சூழ்நிலை கிடையாது.க hரணம் பொருட்களின் விலை அதிகரித்துள்ள அதே நேரம் வருமானமும் குறைந்துள்ளது. எனவே இப்பண்டிகை காலத்தில் பொருட்களின் விலையை மக்களின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைத்து வழங்கவும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“ மலையக பகுதிகளில் அனைத்து தோட்டங்களிலும் திருவிழாக்காலம் ஆரம்பித்துள்ளது.அதே சந்தர்ப்பத்தில் சித்திரை புத்தாண்டை கொண்டாடவும் மக்கள் தயாராகி விட்டனர்.ஆனால் அப்பண்டிகையை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் மக்கள் கொண்டாட பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக உள்ளூர் உற்பத்திகளின் உற்பத்தியாளருக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பொருட்களின் விலைகளை குறைக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் தற்போது டொலர் பெருமதி குறைந்துள்ளமையால் இறக்குமதி பொருட்களின் விலைகளை குறைத்தும் மக்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப குறைந்த விலையில் பொருட்களை விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles