மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும் என்ற திட்டத்தை கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் இவ்விடயம் தெளிவாக குறிபபிடப்பட்டிருந்தது.
எனவே, ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு மலரும் எமது ஆட்சியில் இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் வேலுகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,
“ மலையக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி, உரிமைகளை வென்றெடுத்து சமூகமாற்றத்தை நோக்கி பயணிப்பதே எமது அரசியல் இலக்காக இருக்கின்றது. அந்தவகையில் கடந்த நான்கரை வருடங்களில் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவு கட்டி பெருந்தொட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமையுடன் சொந்த வீட்டில்வாழ வைப்பதற்கான அடித்தளத்தை இட்டு, அதனை செயற்படுத்தினோம். இதனால் தோட்டங்கள் கிராமங்களாகின. முகவரியற்றவர்களாக இருந்தவர்களுக்கு முகவரியும் கிடைத்தது. இனிவரும் காலப்பகுதியிலும் வீட்டுத்திட்டம் தொடரவுள்ளது.
அடுத்ததாக கூட்டுஒப்பந்தமானது தோல்விகண்ட பொறிமுறை என்பது உறுதியான நிலையில் அதற்கு மாற்றீடாக – மாற்று திட்டமாக , பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும் என்பதற்கான திட்டங்களை நாம் முன்வைத்தோம்.
குறுகிய, மத்திய கால அடிப்படையில் இதற்கான பொறிமுறை வகுக்கப்படவேண்டும் எனவும் வருமானம் உழைப்பவர்களாக எம்மவர்கள் மாற்றப்படவேண்டும் எனவும் வவலி
எனவே, நாட்கூலி என்ற நிலைமாறி தோட்டத் தொழிலாளர்களும் சிறுதோட்ட முதலாளிமாராகவேண்டும் என்ற எமது எண்ணம் சஜித் பிரேமதாச தலைமையில் அமையும் புதிய அரசாங்கத்தில் நிச்சம் நிறைவேறும். ஆகவே, கொள்கை அடிப்படையிலான எமது அரசியல் பயணத்துக்கு கண்டி மாவட்ட மக்கள் இம்முறையும் பேராதரவை வழங்குவார்கள் என்பது உறுதி.” – என்றார்.
