சிறுமியைத் துறத்தும் பொலிசார்! சிங்கராஜ வனத்திற்குள் நட்சத்திர விடுதி கட்டுவது யார்? வீடியோ

சிங்கராஜ வனப்பகுதியில் காடழிப்பு நடப்பதாக தொலைக்காட்சியொன்றில் தெரிவித்த சிறுமியொருவரின் வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் இளம் வயது சிறுமியொருவர் தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சிறுமியின் வீட்டிற்கு பொலிசார் சென்று வாக்குமூலமொன்றைப் பெற்றுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பொதுஅறிவு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போது அதில் கலந்துகொண்ட சிறுமி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார்.

நான் சிங்கராஜ வனப்பிரதேசத்தின் நுழைவாயில் பிரதேசமொன்றில் வசிக்கின்றேன். அங்கு காடுகள் வெட்டப்படுகின்றன. மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் அங்குள்ள ஜீவராசிகள் அநாதியற்று அலைக்கின்றன.” என்று தெரிவித்தார்.

எதற்காக இவை வெடுப்படுகின்ற என்பது குறித்து தெரியுமா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிறுமியிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அந்த சிறுமி குறித்த வனப்பிரதேசத்தில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாக தெரிவித்தார். இதற்காகவே நாளாந்தம் மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்படுவது குறித்தும் விபரித்தார்.

”அந்தப் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற யானைகள் மூன்று இருந்தன. அதில் ஒன்றுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை . இன்னும் இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. மனிதர்கள் நினைக்கிறார்கள், காடுகள் தமக்கானவை மட்டும் என்று. மரங்கள் வெட்டப்படுவது மட்டும் அங்கு பிரச்சினையல்ல. அங்கு ஜீவராசிகளும் வாழ்கின்றன. அவைகுறித்தே நான் பேசுகிறேன். இந்த மனிதர்களுக்கு வீடுகள் இல்லையென்றால் பரவாயில்லை. இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்நியர்கள் வந்து எமது வீட்டை கபளிகரம் செய்வதைப் போல் இவர்கள் நடந்துகொள்கின்றனர். அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயனில்லை. இலங்கை முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இவற்றைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.” என்று அந்த சிறுமி தெரிவித்தார்.

சிங்கராஜ வனத்தில் நடக்கும் இந்த காடழிப்பு குறித்து பகிரங்கமாக தெரிவிக்கவே இதனைக் களமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த சிறுமி குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் மேடைகளிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், குறித்த சிறுமியின் வீட்டிற்கு பொலிசார் தேடிச் சென்று வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாகவும், குறித்த சிங்கராஜ வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாகவும், காடழிப்புகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்படுவதாகவும், இது அரசாங்கத்தில் உள்ள பெருந்தலைவர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே, குறித்த சிறுமியை பொலிசார் துறத்த ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், காடழிப்பு விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

Related Articles

Latest Articles