சிறைச்சாலை கலவரம் – இறுதி விசாரணை அறிக்கை 30 ஆம் திகதி கையளிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஐவரடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவரத்ன செயற்பட்டார்.

சிறைச்சாலை மோதலுக்கான காரணம் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி விசாரணைகளை முன்னெடுத்த இக்குழு அண்மையில் இடைக்கால அறிக்கையை கையளித்தது.  இந்த நிலையில், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட முழு அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹர சிறைச்சாலை  மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர். இரு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 104 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles