சிவனொளி பாதமலை யாத்திரீகர் மாரடைப்பால் மரணம்

கரந்தெனிய பகுதியில் இருந்து சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 74 வயது வயோதிபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமானார்.

பெல்வத்தகே பிரேமரட்ன என்பவர் நேற்று அதிகாலை வேளையில் சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏறிக் கொண்டு இருந்த வேளையில் ரத்து அம்பலம பகுதியில் வைத்து கடும் சுகவீனமடைந்தார்.

உடன் வந்திருந்த அவரது உறவினர்கள் மூலம் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர், அங்கிருந்து அவசர சிகிச்சை அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

எனினும் அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Articles

Latest Articles