அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இதனையடுத்தே அவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிகழபிரதேச சபை தலைவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.