சீனாவில் வைத்தியசாலையில் கத்திக்குத்து: பலர் பலியென அச்சம்

சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இருவர் உயிரிழந்துள்ளமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் உள்ள ஜென்ஜியாங் கவுண்டி மக்கள் வைத்தியசாலையில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வைத்தியசாலைக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார். இதனால் பார்வையாளர்கள், நோயாளிகள் என தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles