சீரற்ற காலநிலையால் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – 1,125 வீடுகள் சேதம்

காலி, மாத்தறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 20 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு மற்றும் காற்றால் 13 வீடுகள் முழுமையாகவும் 1,125 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் கம்பஹா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்திலேயே வெள்ள அபாயம் காரணமாக இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், வெள்ளநீர் புகுந்துள்ளதால் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வீழ்ச்சி தொடர்ந்தால் நில்வலா கங்கை பெருங்கெடுத்து, மேலும் சில பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் மாத்தறை மற்றும் கால மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles