நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 12 பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
102 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 952 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
10 ஆயிரத்து 431 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 43 ஆயிரத்து 631 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காணாமல்பொயுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 ஆயிரத்து 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் வடக்கு மாகாணத்தில் 37 ஆயிரத்து 385 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.