‘சுனாமி’ ஊழித்தாண்டவம் – இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.

2004 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்சிமிட்டும் நேரத்தில் சீரிப்பாய்ந்த சுனாமி அலைகள் தாக்கிச் சென்றது.

இந்த அனர்த்தத்தினால் இலங்கையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெருமளவு பொருட் சேதமும் ஏற்பட்டது.

அதேவேளை, சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா அச்ச நிலைமை காரணமாக ஒன்றுகூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

சுனாமினால் உலகளவில் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன.

2004  டிசம்பர் 26 ஆம் திகதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.

Related Articles

Latest Articles