‘சூர்யாவுடன் நடிக்க பயந்தேன்’ – மனம் திறந்தார் அபர்ணா

சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி, அப்படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“நான் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறேன். சூர்யா படத்துக்கு நடிகை தேர்வு நடப்பது தெரிந்து அங்கு போனேன். நடிப்புக்கு பெயர்போன சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம் என்று கருதினேன். வாய்ப்பு கிடைத்த தகவல் வந்ததும் ஆகாயத்திலேயே பறக்க ஆரம்பித்தேன்.

சீனியர் நடிகர் சூர்யா. எனது பெயர் கூட யாருக்கும் தெரிந்து இருக்காது. நான் புதுப்பெண். என்னை அவர் ஜோடியாக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். முதலில் அவருடன் நடிக்க மிகவும் பயந்தேன். ஆனால் பயிற்சியில் கதையை இருவரும் சேர்ந்து படித்தோம். எனக்கு மிகவும் உதவி செய்தார். அவரது ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது.

சூர்யாவின் பொறுமையை பார்த்தால் எல்லோரும் அதிசயிப்பார்கள். சக நடிகர்களை ஊக்குவிப்பார். படத்தில் வரும் எல்லா நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பார்.

நடிகர்களாக இருப்பவர்கள் நடித்து முடித்ததும் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அப்படி இல்லை. ஒவ்வொருவர் நடிப்பையும் உன்னிப்பாக கவனிப்பார். மிகவும் நல்ல மனிதர். எனது அம்மாவும், அப்பாவும் இசை கலைஞர்கள். எனது ஊர் கேரளாவில் உள்ள பாலக்காடு.” இவ்வாறு அபர்ணா பாலமுரளி கூறினார்.

Paid Ad