ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் சிலர் மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என்று மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தனிவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு எமது கட்சி முடிவெடுத்துவிட்டது. இந்த முடிவு மாறாது. எமது வேட்பாளர் விரைவில் பெயரிடப்படுவார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள உறுப்பினர்கள் தற்போது கிராமங்களுக்கு சென்ற பிறகு, அங்குள்ள மக்கள் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்போம் என்றே கூறுகின்றனர். எனவே, சென்றவர்களில் சிலர் மீள வரக்கூடும்.
கட்சி செயலாளரை மாற்றுவதற்கென நடைமுறை உள்ளது. மாவட்ட கூட்டங்களில் அதனை செய்ய முடியாது.” – என்றார்.
