செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியது சீன விண்கலம்!

சீனாவின் ( Zhurong ) ஸீஹூரோங் ரோவர் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

6 சக்கரங்களைக் கொண்ட ரோவருடனான இந்த விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது.

தற்போது செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஸீஹூரோங் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.

ஸீஹூரோங் ரோவர், மொத்தம் 240 கிலோ எடையுடையதாகவும், செவ்வாய்க்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கெமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Paid Ad
Previous articleகொழும்பில் 555, கம்பஹாவில் 236, களுத்துறையில் 211 பேருக்கும் கொரோனா!
Next article20 கிலோ பறித்தால்தான் 1000 ரூபா! 4 தோட்டங்களில் சம்பளம் ‘வெட்டு’!!