‘சொல்லால் அடித்தாலும் – கொடும்பாவி எரித்தாலும் பின்வாங்கவே மாட்டேன்’

“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தனாந்த அளுத்கமகே சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் கொள்கையில் நான் உறுதியாக இருக்கின்றேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல அவர்களின் உடல் ஆரோக்கியமும் எனக்கு முக்கியம். அவர்களின் சிறுநீரகங்களையும் பாதுகாக்கவே நான் போராடுகின்றேன்.

என்னை எப்படிதான் விமர்சித்தாலும், உருவ பொம்மைகளை எரித்தாலும் பின்வாங்கமாட்டேன்.” – என்றார்.

அதேவேளை, உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles