2022 ஜனவரியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பிவிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சுகளின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன, திட்டங்கள் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.
அந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சரவை மாற்றத்துக்கு ஆரம்பத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்த பிரதமரும் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளாராரெனவும் தகவல் வெளியாகியுள்ளது.










