நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஜுன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அதுவரை நலன்புரி திட்டங்களை முன்னெடுப்பதெனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரி திட்டங்களை பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தான் சுயாதீன வேட்பாளராக களமிறங்க உத்தேசித்துள்ளதால் வெளியில் இருந்துகூட பலரும் ஆதரவு வழங்கலாம் என்ற கருத்தையும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
