ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? இன்று தீர்க்கமான சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இரு தரப்பில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே இதன்போது விரிவாக ஆராயப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அமெரிக்காவில் இருந்து பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதிக்கும், பஸிலுக்கும் இடையில் நடைபெறும் ஐந்தாவது சுற்று சந்திப்பு இதுவாகும்.

Related Articles

Latest Articles