ஜனாதிபதி தேர்தலை பிற்போட ஆதரவு இல்லை -மொட்டு கட்சி திட்டவட்டம்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் முறைமையை மாற்றம், தேர்தலை ஒத்திவைத்தல், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் எம்முடன் எவரும் கலந்துரையாடவில்லை. வேறு எங்கும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. எதிரணி தரப்பில் இருந்துதான் இப்படியானதொரு கதை வந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமனால் அதற்கு நான் உட்பட பலர் ஆதவு வழங்கமாட்டோம். இதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன்.

உள்ளாட்சிசபை தேர்தலை முறைமையை மாற்றபோய் என்ன நடந்தது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது தேர்தலே இல்லாமல்போயுள்ளது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles