ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் நேற்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்தும் அங்கேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையையும், செயலகத்தையும் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று காலை முதல் செல்கின்றனர்.

