இலங்கையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களின் பரஸ்பர நலனுக்காக ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீன ஜனாதிபதி ஸீ பின்ஜிங், முன்னதாக வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










