ஜெனிவா சமரை எவ்வாறு எதிர்கொள்வது? ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!

ஜெனிவா இராஜதந்திரச் சமரை – சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (9) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும், வெளிவிவகார தொடர்பான அரச அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை 23 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.

ஜெனிவாத் தீர்மானத்துக்கான இணை அனுசரணையை விலக்கிக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினது அறிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் கடும் இராஜதந்திர நெருக்கடி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயெ ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles