ஜே.வி.பியை சீண்டும் ராஜித – (காணொளி)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

” 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனைச் செய்யவில்லை. இந்த ஆயுதக் கலாச்சாரத்தையே பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்றுக்கொண்டார்.

1989ஆம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு மீண்டும் பாரிய அழிவினை ஏற்படுத்தியது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளைள ஏற்படுத்திய தரப்பே இந்த ஜே.வி.பியாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே ஜே.வி.பி. குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை.” – எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles