டயகம பகுதியில் குரங்குகளின் தொல்லையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக டயகம பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வியாபார நிலையங்களில் குறிப்பாக மரக்கறி கடைகளில் மரக்கறிகளை தூக்கி செல்வது பாடசாலை பிள்ளைகளின் பைகளையும் பிடுங்குவது தனியாக செல்பவர்களை துரத்துவது மற்றும் நகரத்தில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களின் பொருட்களை பிடுங்கி செல்லுதல் என குரங்குகளின் அட்டகாசம் நீண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
