டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் அரசாங்கம்: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பிடிப்பதற்கு டயஸ்போராக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். எனவேதான் டயஸ்போராக்களின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடிவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“இந்நாட்டில் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பன மீண்டும் தலைதூக்குகின்றன. சில பகுதிகளில் பிக்குகளுக்கு ஒருவேளை தானம் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, பிரிவினைவாதிகளே இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைத்தனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறகலயவின் பின்னாலும் பிரிவினைவாதிகளே இருந்தனர். இந்த பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே அரசாங்கம் செயல்படுகின்றது என்பது உறுதியாகின்றது.

அதேவேளை, ஆளுங்கட்சிபோல் மக்களை அழைத்துவந்து நாம் கூட்டங்களை நடத்தவில்லை. கிராமங்களில் நேரில் களமிறங்கி மக்களை சந்தித்துவருகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles