டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
மஹிந்த ராஜபக்சவின் படத்தை வைத்து அரசியல் நடத்தி முன்னேறிய அவர்கள், இன்று நன்றி மறந்து செயற்படுகின்றனர் எனவும் அவர் சாடினார்.
