விபத்தில் 28 வயது இளைஞன் பலி: பொகவந்தலாவையில் சோகம்!

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி ஒன்று, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விபத்தில் உயிரிழந்த இளைஞன் அந்த லொறிக்கு அருகில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

அச்சமயம், அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, ஓட்டுநர் (சாரதி) இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்து வந்து, லொறிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது.

இதனால் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் நசுங்கிய அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles