டலஸ், தயாசிறி ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவு?

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் விரைவில் இணையக்கூடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் எம்முடன் இணைந்துள்ளனர். ஏனைய எம்.பிக்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. எதிர்காலத்தில் அவர்கள் கூட்டணியில் இணைவார்கள் என நம்புகின்றோம்.

அதேபோல தயாசிறி ஜயசேகரவும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார். அந்த தரப்புகளுடன் அவர் எம்முடன் இணைவார் என நம்புகின்றோம்.
ஒக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles