டலஸ் தலைமையில் சுயாதீன அணி உதயம்? அரசுக்கு மேலும் நெருக்கடி!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின்போது முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இதன்போதே ’20’ ஐ நீக்கிவிட்டு ’19’ ஐ திருத்தங்கள் சகிதம் செயற்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் முன்வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவையும் வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் இடம்பெறும் நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக மறுத்துவிட்டனர்.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற வேண்டுமானால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும். அதற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மேலும் சில இறுக்கமான நடைமுறைகளும் உள்ளன. எனவே, தற்போதைய சூழ்நிலையில் குற்றப் பிரேரணையை நிறைவேற்றுவது பெரும் சவாலுக்குரிய விடயமாகும்.

எனவேதான், பிரதமர் மஹிந்த உள்ளடங்களான அரசை பதவியில் இருந்து அறக்குவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்ல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன அணிகள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி யோசனைகளை சபாநாயகர், சட்டமா அதிபருக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். அவற்றில் உள்ள விடயங்களையும் உள்ளடக்கியே புதிய பிரேரணையை மஹிந்த அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார். அந்த பிரேரணையே 21 ஆவது திருத்தச்சட்டமாக சபைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளதென இ.தொ.காவின் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பிரதமருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி மேற்கொண்டுவருகின்றது. இதற்கு 113 எம்.பிக்களின் ஆதரவு இல்லையேல் பதவி விலகும் முடிவில் பிரதமர் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, பிரதி சபாநாயகருக்கான தேர்தலின்போது அநுர பிரியதர்சன யாப்பாவை வேட்பாளராக நிறுத்துவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி உத்தேசித்துள்ளது. ஆளுங்கட்சியின் சார்பில டிலான் பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

நாடாளுமன்றம் மே 4 ஆம் திகதி கூடும்போது முதல் நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு இடம்பெறவேண்டும்.
அன்றைய தினம் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஆளுங்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேறும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles