பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (டிரஸ்ட்) பதுளை மாவட்ட பிராந்திய பணிப்பாளர் எல்.பி.என். சேனாரத்ன, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக இ.தொ.காவின் உபத் தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான
பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” எல்.பி.என். சேனாரத்ன கடந்த 07 வருடங்களாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (TRUST) பிராந்திய பணிப்பாளராக கடமை புரிந்திருந்தார்.
இவர் கொவிட்-19 தொற்று காலத்தில் மக்கள் நலன் கருதி அயராது செயற்பட்டார்.சேவை காலத்தில் அர்பணிப்புடன் சமூகத்திற்காக பணியாற்றிய இவருடைய இழப்பு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கும், இச்சமூகத்திற்கும் (TRUST) பாரிய இழப்பாகும்.
சேனாரத்ன அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.” – என்றும் இரங்கல் செய்தியில் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.










