‘டொலர் நெருக்கடி’ – சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மூடுவிழா!

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஜனவரி 30 ஆம் திகதிவரை குறித்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருக்கும்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டாலும், நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என துறைசார் அமைச்சர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles