ட்ரம்ப் பதவியேற்க முன் 33 பணயக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் விரைவில் போர் நிறுத்தம் செய்யப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

அதற்கு முன்னர், போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் அமைப்பு 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர். இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles