பிட்டிகல அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் தாக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










