தனிக்கட்சி ஆட்சி முறைமையை உருவாக்க ஜே.வி.பி. முயற்சி!

தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயற்சித்துவருகின்றது. இதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 1982 இல் அரச சொத்துகளுக்கு கட்சியொன்று சேதம் விளைவித்ததால்தான் , சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பொது சொத்து சட்டம் கொண்டுவரப்பட்டது. 2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்காக வீதியில் இறங்கிய கட்சிதான், பொது சொத்து சட்டத்தின்கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளது.

தனிக்கட்சி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சியின் மற்றுமொரு அங்கமே ரணில் விக்கிரமசிங்கவின் கைதாகும். எனவே, அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் 1987 மற்றும் 89 காலப்பகுதியில் அவர்களால் செய்ய முடியாமல்போன தனிக்கட்சி ஆட்சிமுறைமையை உருவாக்குவதற்கு முற்படக்கூடும்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles