இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுசபைக் கூட்டம் இன்று திருகோணமலையில் கூடியது.
தலைமைப்பதவிக்கு போட்டி நிலவியதால், இரகசிய வாக்கெடுப்புமூலம் தேர்வு நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு 184 வாக்குகளும், எம்.ஏ. சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மற்றுமொரு வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் சிறிதரன் எம்.பிக்கு ஆதரவு வழங்கினார்.
இதன்அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்தவாரம் கட்சியின் செயற்குழுகூடி இதற்கு அங்கீகாரம் வழங்கும்.










