தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அங்கஜனும் வெளிநடப்பு ! தையிட்டியில் நடந்தது என்ன?

யாழ்., தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரையை அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதைக் கண்டித்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

அதன்போது கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன், த.சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே, சிவஞானமும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

Related Articles

Latest Articles