இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நாளை 20 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலுள்ள மாலதி மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் ஆர். சிவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் இடம்பெறவுள்ளது.
