07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.

23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனைசூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles