நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூவரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இருவரும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் போட்டியிட்டனர்.
எனினும், இம்முறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் மூவர் நிறுத்தப்படவுள்ளனர் எனவும், இதற்கு ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
மலையக மக்கள் முன்னணியில் சார்பில் மூவரை நிறுத்துவதற்கு ராதாகிருஷ்ணன் தயாராகிவருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.










