ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை களமிறங்குவதற்கான இறுதி முடிவை அக்கட்சி எடுத்துவிட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தாலும் அந்நிகழ்வை 7 ஆம் திகதி நடத்துவதற்கு தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்குரிய கட்டுப்பணத்தை மொட்டு கட்சி செலுத்தவுள்ளது.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வு மஹிந்த ராஜபக்ச தலைமையில் தாமரை தடாகத்தில் 7 ஆம் திகதி காலை நடைபெறும் என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
